🔗

abi-yala-2805: 2805

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِأَصْحَابِهِ، فَلَمَّا قَضَى صَلَاتَهُ أَقْبَلَ عَلَيْهِمْ بِوَجْهِهِ فَقَالَ: «أَتَقْرَءُونَ فِي صَلَاتِكُمْ خَلْفَ الْإِمَامِ وَالْإِمَامُ يَقْرَأُ؟» فَسَكَتُوا، فَقَالَهَا ثَلَاثَ مَرَّاتٍ، فَقَالَ قَائِلٌ – أَوْ قَالَ قَائِلُونَ – إِنَّا لَنَفْعَلُ، قَالَ: «فَلَا تَفْعَلُوا لِيَقْرَأْ أَحَدُكُمْ بِفَاتِحَةِ الْكِتَابِ فِي نَفْسِهِ»


2805. நபி (ஸல்) அவர்கள் தம்முடைய தோழர்களுக்கு தொழுகை நடத்தினார்கள். அவர்கள் தொழுகையை நிறைவேற்றியதும் தம்முடைய முகத்தை ஸஹாபாக்களை முன்னோக்கி “இமாம் ஓதிக் கொண்டிருக்கும் நிலையில் நீங்கள் இமாமிற்குப் பின்னால் உங்கள் தொழுகையில் ஓதுகிறீர்களா?” என்று கேட்டார்கள். அவர்கள் வாய்மூடி மவுனமாக இருந்தார்கள். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் மூன்று தடவை கேட்டதும் நபித்தோழர்களில் ஒருவர் ”நாங்கள் அவ்வாறு செய்கிறோம்“ என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறு செய்யாதீர்கள். (என்றாலும்) “அல்ஹம்து சூராவை“ தன்னுடைய மனதிற்குள் ஓதிக் கொள்ளுங்கள்“ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)