جَاءَ شَيْخٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَاجَتِهِ فَأَبْطَئُوا عَنِ الشَّيْخِ أَنْ يُوَسِّعُوا لَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا، وَيُوَقِّرْ كَبِيرَنَا»
4242. ஒரு முதியவர் ஒரு தேவையின் நிமித்தமாக நபி (ஸல்) அவர்களின் சபைக்கு வந்தார். அவருக்கு இடமளிக்க மக்கள் தாமதித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும்; பெரியவருக்கு மரியாதை செய்யாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)