كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَبُوكَ، فَطَلَعَتِ الشَّمْسُ بِضِيَاءٍ وَشُعَاعٍ وَنُورٍ لَمْ يَرَهَا طَلَعَتْ فِيمَا مَضَى بِمِثْلِهِ، فَأَتَى جِبْرِيلُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: ” يَا جِبْرِيلُ، مَالِي أَرَى الشَّمْسَ الْيَوْمَ طَلَعَتْ بِضِيَاءٍ وَنُورٍ وَشُعَاعٍ لَمْ أَرَهَا طَلَعَتْ فِيمَا مَضَى؟، قَالَ: إِنَّ ذَلِكَ أَنَّ مُعَاوِيَةَ بْنَ مُعَاوِيَةَ اللَّيْثِيَّ مَاتَ بِالْمَدِينَةِ الْيَوْمَ، فَبَعَثَ اللَّهُ إِلَيْهِ أَلْفَ مَلِكٍ يُصَلُّونَ عَلَيْهِ، قَالَ: وَفِيمَ ذَاكَ؟ قَالَ: قَالَ: كَانَ يُكْثِرُ قِرَاءَةَ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ فِي اللَّيْلِ وَالنَّهَارِ، وَفِي مَمْشَاهُ، وَقِيَامِهِ وَقُعُودِهِ، فَهَلْ لَكَ يَا رَسُولَ اللَّهِ أَنْ أَقْبِضَ لَكَ الْأَرْضَ فَتُصَلِّي عَلَيْهِ؟ قَالَ: نَعَمْ، فَصَلَّى عَلَيْهِ “
4267. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் தபூக் போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது சூரியன் இதற்கு முன் நாங்கள் பார்த்திராத அளவுக்கு மிக அதிகமான பிரகாசத்துடனும் ஒளிக்கதிர்களுடனும் உதித்தது. உடனே நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், ‘ஜிப்ரீலே! வழக்கத்தை விட இன்று சூரியன் அதிகப் பிரகாசத்துடனும் ஒளியுடனும் உதிப்பதை நான் காண்கிறேனே, என்ன காரணம்?’ என்று கேட்டார்கள்.
அதற்கு ஜிப்ரீல் (அலை), ‘இன்று மதீனாவில் முஆவியா பின் முஆவியா அல்லைஸீ (அல்முஸனீ) அவர்கள் இறந்துவிட்டார்கள். அவருக்காகப் பிரார்த்திக்க அல்லாஹ் எழுபதாயிரம் மலக்குகளை அனுப்பியுள்ளான்’ என்றார்.
நபி (ஸல்) அவர்கள், ‘அவர் (இத்தகைய சிறப்புப் பெற) என்ன செய்தார்?’ என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், ‘அவர் இரவிலும் பகலிலும், நடக்கும்போதும் நிற்கும்போதும் அமர்ந்திருக்கும்போதும் “குல் ஹுவல்லாஹு அஹத்” (எனும் அத்தியாயத்தை) அதிகமாக ஓதிக்கொண்டிருப்பார். இறைத்தூதரே! உங்களுக்காக பூமியை நான் மடித்துச் சுருட்டித் தரட்டுமா? நீங்கள் அவருக்கு தொழுகை நடத்துகிறீர்களா?’ என்று கேட்டார்.
நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்றார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் (அங்கு இருந்தபடியே மதீனாவில் உள்ள அவருக்கு ஜனாஸாத்) தொழுகை நடத்தினார்கள்.