«أَلَا أُخْبِرُكُمْ بِمَنْ يَحْرُمُ عَلَى النَّارِ، أَوْ مَنْ تَحْرُمُ عَلَيْهِ النَّارُ؟ عَلَى كُلِّ هَيِّنٍ قَرِيبٍ سَهْلٍ»
5053. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நரகத்திற்கு தடைசெய்யப்பட்ட ஒருவரைப் பற்றி, அல்லது எவருக்கு நரகம் தடைசெய்யப்பட்டதோ அவரைப் பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? (அவர் யாரெனில்)
அவர் மக்களை நெருங்கியிருப்பார்; பணிவுள்ளவராக இருப்பார்; மென்மையானவராக இருப்பார்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)