أَنَّهَا سُئِلَتْ عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: كَانَ يُصَلِّي بِالنَّاسِ الْعِشَاءَ، ثُمَّ يَرْجِعُ إِلَى أَهْلِهِ، فَيُصَلِّي أَرْبَعًا، ثُمَّ يَأْوِي إِلَى فِرَاشِهِ، ثُمَّ سَاقَ الْحَدِيثَ بِطُولِهِ، وَلَمْ يَذْكُرْ يُسَوِّي بَيْنَهُنَّ فِي الْقِرَاءَةِ وَالرُّكُوعِ وَالسُّجُودِ، وَلَمْ يَذْكُرْ فِي التَّسْلِيمِ حَتَّى يُوقِظَنَا.
1348. ஹதீஸ் எண்-1346 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
ஸுராரா பின் அவ்ஃபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (இரவு) தொழுகையைப் பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு இஷா தொழுவித்து விட்டுத் தம் குடும்பத்தினரிடம் வீட்டிற்குச் சென்று, நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். பிறகு (உறங்குவதற்காக) தம் விரிப்பின்
பக்கம் ஒதுங்குவார்கள்.
(என்று இந்தச் செய்தி முன்புபோல் தொடர்கிறது. ஆனால் இதில், “ஓதுவது, குனிவது, சிரம்பணிவது ஆகியவற்றைச் சமமான அளவில் செய்வார்கள். எங்களை (உறக்கத்திலிருந்து) விழிக்கச் செய்யும் அளவு குரல் உயர்த்தி ஸலாம் கொடுப்பார்கள்” போன்ற வாசகங்கள் இந்த அறிவிப்பில் இடம் பெறவில்லை.)