🔗

அபூதாவூத்: 1412

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ عَلَيْنَا السُّورَةَ -، قَالَ ابْنُ نُمَيْرٍ: فِي غَيْرِ الصَّلَاةِ، ثُمَّ اتَّفَقَا: – فَيَسْجُدُ وَنَسْجُدُ مَعَهُ، حَتَّى لَا يَجِدَ أَحَدُنَا مَكَانًا لِمَوْضِعِ جَبْهَتِهِ


1412. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரம்பணிதல் வசனத்தை எங்களுக்கு ஓதிக்காட்டும்போது அவர்கள் சிரம்பணிவார்கள். உடனே நாங்களும் சிரம்பணிவோம். அப்போது எங்களிடையே நெரிசல் ஏற்பட்டு, எங்களில் சிலருக்கு (சிரம்பணிவதில்) நெற்றி வைப்பதற்குக்கூட (போதுமான) இடம் கிடைக்காது.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

இதன் அறிவிப்பாளர் தொடரில் உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் இப்னு நுமைர் (ரஹ்) அவர்கள், இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதியது “தொழுகைக்கு வெளியில்” என்று அறிவித்துள்ளார்.