«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ عَلَيْنَا الْقُرْآنَ، فَإِذَا مَرَّ بِالسَّجْدَةِ كَبَّرَ، وَسَجَدَ وَسَجَدْنَا مَعَهُ»
1413. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் குர்ஆனை ஓதுபவர்களாக இருந்தனர்.
அவர்கள் ஸஜ்தா வசனத்தைக் கடக்கும் போது, “தக்பீர் சொல்லி ஸஜ்தா செய்வார்கள்”. அவர்களுடன் நாங்களும் செய்வோம்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
ஸுப்யான் ஸவ்ரீ அவர்கள் இந்த ஹதீஸின் காரணமாக மகிழ்ச்சியடைந்தார்கள் என அப்துர்ரஸ்ஸாக் அவர்கள் கூறியதாக அஹ்மத் பின் ஃபுராத் கூறினார்.
ஸுப்யான் ஸவ்ரீ அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணம், அவர்கள் ஸஜ்தா வசனத்தை ஓதினால் (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் கூறி ஸஜ்தா செய்வார் என்பதினாலாகும் என்று அபூதாவூத் இமாம் கூறுகிறார்.