🔗

அபூதாவூத்: 1414

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي سُجُودِ الْقُرْآنِ بِاللَّيْلِ، يَقُولُ فِي السَّجْدَةِ مِرَارًا: «سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ، وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ، بِحَوْلِهِ وَقُوَّتِهِ»


பாடம்: 334

சிரம்பணியும்போது என்ன சொல்லவேண்டும்?

1414. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் ‘ஸஜ்தா’ வசனங்களை ஓதி சிரம்பணியும்போது, “ஸஜத வஜ்ஹீ லில்லதீ கலக்கஹூ, வஷக்க ஸம்அஹூ வ பஸரஹூ பி ஹவ்லிஹீ வ குவ்வத்திஹீ” என்று பல முறை கூறுவார்கள்.