🔗

அபூதாவூத்: 1485

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«لَا تَسْتُرُوا الْجُدُرَ مَنْ نَظَرَ فِي كِتَابِ أَخِيهِ بِغَيْرِ إِذْنِهِ، فَإِنَّمَا يَنْظُرُ فِي النَّارِ، سَلُوا اللَّهَ بِبُطُونِ أَكُفِّكُمْ، وَلَا تَسْأَلُوهُ بِظُهُورِهَا، فَإِذَا فَرَغْتُمْ، فَامْسَحُوا بِهَا وُجُوهَكُمْ»


1485. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சுவர்களை திரைகளால் மறைக்காதீர்கள். தனது சகோதரனின் கடிதத்தை அவரின் அனுமதியின்றி பார்(த்து படி)ப்பவர் நரகத்தையே பார்க்கிறார்.

நீங்கள் அல்லாஹ்விடம் வேண்டும் போது உங்களது உள்ளங்கைகளைக் கொண்டு பிரார்த்தனை செய்யுங்கள். உங்களது கைகளின் மேற்புறத்தைக் கொண்டு அவனிடம் பிரார்த்தனை செய்யாதீர்கள். பிரார்த்தனை செய்த பின் கைகளை முகத்தில் தடவுங்கள்.

அறிவிப்பவர்:  இப்னு அப்பாஸ் (ரலி)