🔗

அபூதாவூத்: 1517

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

مَنْ قَالَ: أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيَّ الْقَيُّومَ، وَأَتُوبُ إِلَيْهِ، غُفِرَ لَهُ، وَإِنْ كَانَ قَدْ فَرَّ مِنَ الزَّحْفِ


1517. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், “அஸ்தஃக்ஃபிருல்லாஹல்லதீ லா இலாஹ இல்லா ஹுவல் ஹய்யல் கய்யூம், வ அதூபு இலைஹ்”

(பொருள்: நான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்புத் தேடி அவனிடமே திரும்புகின்றேன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன்)

என்று மூன்று தடவை கூறினால் அவருடைய பாவங்கள் (அல்லாஹ்வால்) மன்னிக்கப்படும். அவர் போரில் புறமுதுகிட்டு ஓடியிருந்தாலும் (அதையும் மன்னிக்கப்படும்).

அறிவிப்பவர்: ஸைத் பின் பவ்லா (ரலி)