🔗

அபூதாவூத்: 1573

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

 بِبَعْضِ أَوَّلِ هَذَا الْحَدِيثِ، قَالَ: «فَإِذَا كَانَتْ لَكَ مِائَتَا دِرْهَمٍ، وَحَالَ عَلَيْهَا الْحَوْلُ، فَفِيهَا خَمْسَةُ دَرَاهِمَ، وَلَيْسَ عَلَيْكَ شَيْءٌ – يَعْنِي – فِي الذَّهَبِ حَتَّى يَكُونَ لَكَ عِشْرُونَ دِينَارًا، فَإِذَا كَانَ لَكَ عِشْرُونَ دِينَارًا، وَحَالَ عَلَيْهَا الْحَوْلُ، فَفِيهَا نِصْفُ دِينَارٍ،

فَمَا زَادَ، فَبِحِسَابِ ذَلِكَ»، قَالَ: فَلَا أَدْرِي أَعَلِيٌّ يَقُولُ: فَبِحِسَابِ ذَلِكَ، أَوْ رَفَعَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ،

وَلَيْسَ فِي مَالٍ زَكَاةٌ حَتَّى يَحُولَ عَلَيْهِ الْحَوْلُ، إِلَّا أَنَّ جَرِيرًا، قَالَ ابْنُ وَهْبٍ «يَزِيدُ فِي الْحَدِيثِ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَيْسَ فِي مَالٍ زَكَاةٌ حَتَّى يَحُولَ عَلَيْهِ الْحَوْلُ»


1573. ஹதீஸ் எண்-1572 இல் வரும் செய்தியின் ஆரம்பப் பகுதிகளில் சிலவை இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

(மேலும் இந்தச் செய்தி கீழ்க்கண்டவாறு  தொடர்கிறது:)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உனக்கு 200 திர்ஹங்கள் இருந்து, அதற்கு 1 வருடம் நிறைவடைந்து விட்டால், அதில் 5 திர்ஹங்கள் (ஸகாத் கடமையாகும்). 20 தீனார் ஆகும் வரை (தங்கத்தில் ஸகாத்) கடமையில்லை.

20 தீனார் இருந்து, அதில் 1 வருடம் நிறைவடைந்து விட்டால், அரை தீனார் (ஸகாத்) ஆகும். இந்தக் கணக்கின் அடிப்படையில், இதற்கு அதிகமானவைகளுக்கு கணக்கிட வேண்டும்.

—இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்: “இந்தக் கணக்கின் அடிப்படையில் இதற்கு அதிகமானவைகளுக்கு கணக்கிட வேண்டும்” என்ற சொற்களை அலீ (ரலி) அவர்கள் (தனது மாணவரிடம் விளக்கமாக) கூறினார்களா? அல்லது நபி (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர்களிடம் கூறினார்களா? என்று எனக்கு தெரியவில்லை—

ஒரு வருடம் கடக்கும் வரை செல்வத்தில் ஸகாத் கடமையில்லை.

—இப்னு வஹ்ப் (ரஹ்) கூறுகிறார்கள்: இந்த நபிமொழியில், “ஒரு வருடம் கடக்கும் வரை செல்வத்தில் ஸகாத் கடமையில்லை” என்ற வாக்கியத்தை ஜரீர் பின் ஹாஸிம் அவர்களே கூடுதலாக அறிவித்துள்ளார்—

அறிவிப்பவர்: அலீ (ரலி)