أَنَّهُمَا أَتَيَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الْوَدَاعِ، وَهُوَ يُقَسِّمُ الصَّدَقَةَ، فَسَأَلَاهُ مِنْهَا، فَرَفَعَ فِينَا الْبَصَرَ وَخَفَضَهُ، فَرَآنَا جَلْدَيْنِ، فَقَالَ: «إِنَّ شِئْتُمَا أَعْطَيْتُكُمَا، وَلَا حَظَّ فِيهَا لِغَنِيٍّ، وَلَا لِقَوِيٍّ مُكْتَسِبٍ»
1633. (நபி-ஸல்-அவர்களின் ஒரு நிகழ்வை) உபைதுல்லாஹ் பின் அதீ பின் அல்கியார் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
இரண்டு பேர் என்னிடம் வந்து, “நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் விடைபெறும் ஹஜ்ஜின்போது சென்றோம். அப்போது அவர்கள் தர்மத்தைப் பங்கிடுவதில் ஈடுபட்டிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம் தர்மம் கேட்டோம்” என்று கூறினர்.
நபி (ஸல்) அவர்கள் எங்களை மேலும் கீழுமாகக் கூர்ந்து பார்தார்கள். பின்னர், எங்கள் இருவரையும் பலமானவர்களாகக் கண்டார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் விரும்பினால், நான் உங்களுக்கு (தர்மத்தை) வழங்குகிறேன். ஆனால், தர்மத்தில் பணக்காரனுக்கோ அல்லது உழைத்து சம்பாதிக்க முடிந்த, வலிமைமிக்கவனுக்கோ பங்கில்லை.