كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا بَالَ يَتَوَضَّأُ وَيَنْتَضِحُ»
பாடம் : 64
தண்ணீர் தெளித்தல்.
166. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்தால் உலூ செய்வார்கள். மேலும் (மர்ம உறுப்பில்) நீர் தெளிப்பார்கள்.
அறிவிப்பவர் : சுப்யான் பின் ஹகம் சகபீ அல்லது சுப்யான் பின் இப்னு ஹகம் சகபீ ஆவார்.
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :
இந்த இஸ்னாதை சரிகாண்பதில் சுப்யான் அவர்களுக்கு அறிஞர்கள் குழு உடன்பட்டுள்ளது. அவர்களில் சிலர், ஹகம் அல்லது இப்னு ஹகம் என்றும் கூறுகின்றனர்.