180. இதே ஹதீஸை அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து உர்வா அல்முஸ்னீ என்பார் வாயிலாக எமது அறிவிப்பாளர்கள் அறிவித்தனர் என்று அஃமஷ் அறிவிக்கின்றார்.
(எமது அறிவிப்பாளர்கள் என்று குறிப்பிடப்படுபவர்களில் ஹபீப் பின் உபைய் சாபித் என்பாரை தவிர வேறு யாரும் அறியப்படாதவர்கள் ஆவர்.)
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :
ஹபீப் என்பாரிடமிருந்து அஃமஷ் அறிவிக்கும் இந்த ஹதீஸையும் உதிரப்போக்குள்ளவள் ஒவ்வொரு தொழுகைக்கும் உலூச் செய்ய வேண்டும் என்று இதே இஸ்நாத் மூலம் அஃமஷ் அறிவிக்கும் ஹதீஸையும் இவ்விரண்டு ஹதீஸ்களும் பலவீனமானவையே என்று மக்களுக்கு அறிவித்திடுக என்று யஹ்யா பின் சயீத் அல்சுதான் என்பார் ஒருவருக்கு தெரிவித்தார்.
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :
உர்வா அல்முஸ்னீ என்பாரிடமிருந்து மட்டும் தான் ஹபீப் அறிவிக்கின்றார். அதாவது இவர் உர்வா பின் ஜுபைர் அவர்களிடமிருந்து எதையும் அறிவிப்பாளர்களுக்கு அறிவிக்கவில்லை என்று சவ்ரீ அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகின்றது.
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து உர்வா பின் ஜுபைர், ஹபீப் ஆகியோர் வழியாக ஹம்ஸா அச்சய்யாத் அவர்கள் சரியான ஹதீஸை அறிவிக்கின்றனர்.