أَنَّهَا كَانَتْ عِنْدَ ابْنِ جَحْشٍ فَهَلَكَ عَنْهَا وَكَانَ فِيمَنْ هَاجَرَ إِلَى أَرْضِ الْحَبَشَةِ فَزَوَّجَهَا النَّجَاشِيُّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهِيَ عِنْدَهُمْ
2086. உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு ஜஹ்ஷ் என்பவருக்கு வாழ்க்கைப்பட்டிருந்தேன். அவர் இறந்து விட்டார். அப்போது அபீசீனியாவிற்கு அடைக்கலம் சென்றவர்களில் நானும் ஒருவராக இருந்தேன். எனவே, நஜ்ஜாஷி மன்னர் என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்.
அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (ரஹ்)