🔗

அபூதாவூத்: 2106

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

خَطَبَنَا عُمَرُ رَحِمَهُ اللَّهُ، فَقَالَ: «أَلَا لَا تُغَالُوا بِصُدُقِ النِّسَاءِ، فَإِنَّهَا لَوْ كَانَتْ مَكْرُمَةً فِي الدُّنْيَا، أَوْ تَقْوَى عِنْدَ اللَّهِ لَكَانَ أَوْلَاكُمْ بِهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَا أَصْدَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ امْرَأَةً مِنْ نِسَائِهِ، وَلَا أُصْدِقَتْ امْرَأَةٌ مِنْ بَنَاتِهِ أَكْثَرَ مِنْ ثِنْتَيْ عَشْرَةَ أُوقِيَّةً»


2106. அபுல்அஜ்ஃபாஉ அஸ்ஸுலமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு தடவை கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் பின்வருமாறு எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்:

அறிந்துகொள்ளுங்கள்! பெண்களுக்கு வழங்கும் திருமணக்கொடை (மஹர்)களில் (அளவு கடந்து கொடுப்பதன் மூலம்) வரம்பு மீறாதீர்கள். இவ்வுலகில் அது மதிப்புமிக்க செயலாகவோ அல்லாஹ்விடம் இறையச்சத்திற்குரிய செயலாகவோ இருக்குமானால் அவ்வாறு வழங்குவதற்கு உங்களையெல்லாம்விட மிகத் தகுதி வாய்ந்தவர்கள், நபி (ஸல்) அவர்கள்தாம்.

(ஆனால்) நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியருள் யாருக்கும் பன்னிரண்டு ஊக்கியாக்களைவிடக் கூடுதலாக திருமணக்கொடை வழங்கவில்லை. அவர்களுடைய புதல்வியருள் யாருக்கும் பன்னிரண்டு ஊக்கியாக்களைவிடக் கூடுதலாக மணக்கொடை பெற்றதுமில்லை.