أَنَّهَا كَانَتْ تَحْتَ عُبَيْدِ اللَّهِ بْنِ جَحْشٍ فَمَاتَ بِأَرْضِ الْحَبَشَةِ «فَزَوَّجَهَا النَّجَاشِيُّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَمْهَرَهَا عَنْهُ أَرْبَعَةَ آلَافٍ وَبَعَثَ بِهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ شُرَحْبِيلَ ابْنِ حَسَنَةَ»
2107. உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் உபைதுல்லாஹ் பின் ஜஹ்ஷ் என்பவருக்கு வாழ்க்கைப்பட்டிருந்தேன். நாங்கள் அபீசீனியாவிற்கு அடைக்கலமாக சென்றிருந்த சமயத்தில் அவர் இறந்து விட்டார். எனவே, நஜ்ஜாஷி மன்னர் நபி (ஸல்) அவர்கள் சார்பில் எனக்கு நானூறு தீனார்களை மஹராக கொடுத்து என்னை நபி (ஸல்) அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார். மேலும் என்னை நபி (ஸல்) அவர்களிடம் ஒப்படைப்பதற்காக ஷுரஹ்பீல் பின் ஹஸனா என்பவருடன் என்னை அனுப்பிவைத்தார்.
அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (ரஹ்)