🔗

அபூதாவூத்: 2160

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

«إِذَا تَزَوَّجَ أَحَدُكُمُ امْرَأَةً أَوِ اشْتَرَى خَادِمًا، فَلْيَقُلِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ، وَإِذَا اشْتَرَى بَعِيرًا فَلْيَأْخُذْ بِذِرْوَةِ سَنَامِهِ وَلْيَقُلْ مِثْلَ ذَلِكَ».


பாடம்:

திருமணம் குறித்து வந்துள்ள மற்ற பொதுவானவை.

2160. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் ஒரு பெண்ணை திருமணம் செய்தால் அல்லது ஒரு அடிமையை வாங்கினால், “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக கைரஹா, வ கைர மா ஜபில்தஹா அலைஹி. வ அவூது பிக மின் ஷர்ரிஹா, வமின் ஷர்ரி மா ஜபில்தஹா அலைஹி” என்று கூறவும்.

(பொருள்: அல்லாஹ்வே! இதன் மூலம் ஏற்படும் அனைத்து நலவுகளையும்; இதை எந்த நியதியின்படி நீ படைத்துள்ளாயோ அந்த நலவுகளையும் உன்னிடம் கேட்கிறேன். மேலும் இதன் மூலம் ஏற்படும் அனைத்து தீங்குகளையும்; இதை எந்த நியதியின்படி நீ படைத்துள்ளாயோ அந்த தீங்குகளையும் விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.)

உங்களில் ஒருவர், ஒரு ஒட்டகத்தை வாங்கினால் அதன் திமிலைப் பிடித்துக் கொண்டு இதே போன்று கூறவும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

அபூஸயீத் (அப்துல்லாஹ் பின் ஸயீத்) அவர்கள், மணப்பெண், அடிமை விசயத்தில், “பிறகு நெற்றி முடியை பிடித்து அருள்வளம் பெறுவதற்காக துஆ செய்யட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக கூடுதலாக அறிவித்துள்ளார்.