«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنَامُ وَهُوَ جُنُبٌ مِنْ غَيْرِ أَنْ يَمَسَّ مَاءً»
228. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையாக இருக்கும் போது தண்ணீரை தொடாமலே தூங்குவார்கள்.
அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகிறார்கள் :
அபூஇஸ்ஹாக் அவர்களின் இந்த ஹதீஸ், சந்தேகத்திற்குரியதாகும் என்று யசீத் பின் ஹாரூன் கூற நான் செவியுற்றேன் என்று ஹசன் பின் அலீ அவ்வாசிதி எமக்கு தெரிவிக்கின்றனர்.