«لَا تَصُومُوا يَوْمَ السَّبْتِ إِلَّا فِي مَا افْتُرِضَ عَلَيْكُمْ، وَإِنْ لَمْ يَجِدْ أَحَدُكُمْ إِلَّا لِحَاءَ عِنَبَةٍ، أَوْ عُودَ شَجَرَةٍ فَلْيَمْضَغْهُ»،
பாடம்:
சனிக்கிழமையை மட்டும் தேர்ந்தெடுத்து நோன்பு வைப்பதற்கு வந்துள்ள தடை.
2421. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு கடமையாக்கப்பட்டவற்றைத் தவிர (வேறு எந்த நோன்பையும்) சனிக்கிழமையில் நோற்காதீர்கள். உங்களில் ஒருவர் (சனிக்கிழமை அன்று உண்பதற்காக) திராட்சையின் காம்பு அல்லது மரத்தின் குச்சியைத் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளவில்லை என்றாலும் அதையாவது மென்று கொள்ளட்டும்.
அறிவிப்பவர்: அஸ்ஸம்மாஉ பின்த் புஸ்ர் (ரலி)
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
இது மாற்றப்பட்ட சட்டமாகும்.