🔗

அபூதாவூத்: 247

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«كَانَتِ الصَّلَاةُ خَمْسِينَ، وَالْغُسْلُ مِنَ الجَنَابَةِ سَبْعَ مِرَارٍ، وَغَسْلُ الْبَوْلِ مِنَ الثَّوْبِ سَبْعَ مِرَارٍ، فَلَمْ يَزَلْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُ حَتَّى جُعِلَتِ الصَّلَاةُ خَمْسًا، وَالْغُسْلُ مِنَ الْجَنَابَةِ مَرَّةً، وَغَسْلُ الْبَوْلِ مِنَ الثَّوْبِ مَرَّةً»


247. ஐம்பது நேரங்கள் தொழவேண்டும். குளிப்பு கடமையாகி விட்டால் ஏழு முறை குளிக்கவேண்டும். சிறுநீர் பட்ட ஆடையை ஏழு முறை கழுவவேண்டும் என்றே சட்டம் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இதனை மாற்றுமாறு அல்லாஹ்விடம்) கேட்டு கொண்டே இருந்தார்கள். (முடிவில்) தொழுகை ஐந்தாகவும், கடமையான குளிப்பு ஒரு தடவையாகவும் ஆக்கப்பட்டது.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி).