🔗

அபூதாவூத்: 2535

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

نَزَلَ عَلَيَّ عَبْدُ اللَّهِ بْنُ حَوَالَةَ الْأَزْدِيُّ، فَقَالَ لِي: بَعَثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِنَغْنَمَ عَلَى أَقْدَامِنَا فَرَجَعْنَا، فَلَمْ نَغْنَمْ شَيْئًا، وَعَرَفَ الْجَهْدَ فِي وُجُوهِنَا فَقَامَ فِينَا، فَقَالَ: «اللَّهُمَّ لَا تَكِلْهُمْ إِلَيَّ، فَأَضْعُفَ عَنْهُمْ، وَلَا تَكِلْهُمْ إِلَى أَنْفُسِهِمْ فَيَعْجِزُوا عَنْهَا، وَلَا تَكِلْهُمْ إِلَى النَّاسِ فَيَسْتَأْثِرُوا عَلَيْهِمْ» ثُمَّ وَضَعَ يَدَهُ عَلَى رَأْسِي، أَوْ قَالَ: عَلَى هَامَتِي، ثُمَّ قَالَ: «يَا ابْنَ حَوَالَةَ، إِذَا رَأَيْتَ الْخِلَافَةَ قَدْ نَزَلَتْ أَرْضَ الْمُقَدَّسَةِ فَقَدْ دَنَتِ الزَّلَازِلُ وَالْبَلَابِلُ وَالْأُمُورُ الْعِظَامُ، وَالسَّاعَةُ يَوْمَئِذٍ أَقْرَبُ مِنَ النَّاسِ مِنْ يَدِي هَذِهِ مِنْ رَأْسِكَ»،


பாடம்:

(அல்லாஹ்விடத்தில்) நற்கூலியையும், போர்ச் செல்வங்களையும் பெறுவதற்காக போரிடக்கூடியவர் (பற்றி வந்துள்ளவை).

2535. அப்துல்லாஹ் பின் ஸுஃக்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒருமுறை அப்துல்லாஹ் பின் ஹவாலா (ரலி) அவர்கள் என்னிடம் தங்கினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:

ஒருமுறை (ஃகனீமத் எனும்) போர்ச் செல்வங்களை பெறுவதற்காக கால்நடையாக நபி (ஸல்) எங்களை அனுப்பினார்கள். அப்போது நாங்கள் எந்த ஒன்றையும் பெறாமல் திரும்பினோம். முயற்சியின் களைப்பை எங்கள் முகங்களில் அறிந்து கொண்டு எங்களிடம் வந்து நின்று, “இறைவா! இவர்களை என் பொறுப்பில் விட்டு விடாதே! நான் அவர்கள் மீது பலவீனமானவன். அவர்களை அவர்கள் பொறுப்பிலேயும் விட்டுவிடாதே! அவர்களால் அதற்கு சக்திபெற மாட்டார்கள்! அவர்களை மனிதர்கள் பொறுப்பில் விட்டு விடாதே! அவர்கள் அவர்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள்! என்று கூறினார்கள்!

பிறகு என்னுடைய தலை மேல் (அல்லது தலையின் நடுவில்) கை வைத்து, “ஹவாலாவின் மகனே! முகத்தஸ் பூமியில் கிலாஃபத் ஆட்சி வருவதை நீ பார்க்கும் போது நிலநடுக்கமும், மக்களின் கூச்சலும், இன்னும் மிகப்பெரும் நிகழ்வுகளும் ஏற்படும்! என் கை உன் தலை மேல் உள்ளதைப் போல மறுமை நாள் மக்களுக்கு நெருங்கி விடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

அப்துல்லாஹ் பின் ஹவாலா (ரலி) அவர்கள் (சிரியாவில் உள்ள) ஹிம்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.