🔗

அபூதாவூத்: 274

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَنَّ امْرَأَةً كَانَتْ تُهَرَاقُ الدِّمَاءَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاسْتَفْتَتْ لَهَا أُمُّ سَلَمَةَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لِتَنْظُرْ عِدَّةَ اللَّيَالِي وَالْأَيَّامِ الَّتِي كَانَتْ تَحِيضُهُنَّ مِنَ الشَّهْرِ قَبْلَ أَنْ يُصِيبَهَا الَّذِي أَصَابَهَا، فَلْتَتْرُكِ الصَّلَاةَ قَدْرَ ذَلِكَ مِنَ الشَّهْرِ، فَإِذَا خَلَّفَتْ ذَلِكَ فَلْتَغْتَسِلْ، ثُمَّ لِتَسْتَثْفِرْ بِثَوْبٍ، ثُمَّ لِتُصَلِّ فِيهِ»


பாடம்: 107

அதிக இரத்தப்போக்குள்ள பெண்ணுக்கான சட்டம்:

வழக்கமான மாதவிடாய்க் காலத்தின் தொழுகைகளை விட்டுவிடுவாள்.

274. நபி (ஸல்) அவர்களின் மனைவி உம்மு ஸலமா (ரலி) கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஒரு பெண்ணுக்கு வழக்கத்திற்கு மாறாக இரத்தப்போக்கு அதிகமாக ஏற்பட்டது. எனவே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அவளைக் குறித்து மார்க்கச் சட்டத்தைக் கேட்டேன். அதற்கு அவர்கள், “இப்போது ஏற்பட்டுள்ள – அதிக இரத்தப்போக்குக்கு முன்பு, மாதத்தில் எத்தனை நாள்கள் இரவு – பகல் மாதவிடாய் ஏற்பட்டது என்பதை அவள் கணக்கிட்டு அதே அளவுள்ள நாள்கள் இப்போதும் தொழுகையைத் தொழாமல் தவிர்த்து விடட்டும். வழக்கமான நாள்கள் முடிந்த தும் குளித்துக்கொள்ளட்டும். பின்னர் அந்த இடத்தில் துணியை இறுகக் கட்டிக் கொண்டு தொழட் டும்” என்று பதிலளித்தார்கள்.