🔗

அபூதாவூத்: 2948

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

«مَنْ وَلَّاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ شَيْئًا مِنْ أَمْرِ الْمُسْلِمِينَ فَاحْتَجَبَ دُونَ حَاجَتِهِمْ، وَخَلَّتِهِمْ وَفَقْرِهِمْ، احْتَجَبَ اللَّهُ عَنْهُ دُونَ حَاجَتِهِ وَخَلَّتِهِ، وَفَقْرِهِ» قَالَ: فَجَعَلَ رَجُلًا عَلَى حَوَائِجِ النَّاسِ


2948. முஸ்லிம்களின் விவகாரங்களில் ஏதாவது ஒன்றை ஒருவருக்கு பொறுப்புக் கொடுத்து, அவர், மக்களின் தேவைகளை, அவசியத் தேவைகளையும் வறுமைகளையும் (கண்டுகொள்ளாமல்) தடுத்துக் கொண்டால் இவனின் தேவைகளையும் அவசியத் தேவைகளையும் வறுமையையும் அல்லாஹ் கண்டுகொள்ளாமல் தடுத்துவிடுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர் : முஆவியா (ரலி)