🔗

அபூதாவூத்: 300

ஹதீஸின் தரம்: விபரம் கீழே


300. இதை போன்று நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஆயிஷா (ரலி) அவர்கள் மஷ்ரூக் என்பாரின் மனைவி இப்னு ஷுர்மா பின் அய்யூப் அபுல் அலாயசீத் வழியாக அஹ்மத் பின் ஸினான் அறிவிக்கின்றார்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் : 

அதீபின் ஸாபித் என்பாருடைய (297வது) ஹதீஸ், ஹபீபிடமிருந்து அஃமஷ் அறிவிக்கின்ற (298வது) ஹதீஸ் அய்யூப் அபுல் அலா அவர்களுடைய (300வது) ஹதீஸ் ஆகிய அனைத்துமே பலவீனமானவையே. சரியானவை அல்ல ஹபீபிடமிருந்து அஃமஷ் அறிவிக்கின்ற இந்த ஹதீஸை ஹப்ஸ் பின் கியாஸ் என்பார் மவ்கூபாக (நபி (ஸல்) அவர்களிடம் சேர்க்காமல் ஆயிஷா (ரலி) அவர்களோடு இத்தொடரை நிறுத்தி) அறிவித்திருப்பது இந்த ஹதீஸ் பலவீனமானது தான் என்று தெரிவிக்கின்றது. மேலும் ஹப்ஸ் பின் கியாஸ், ஹபீபுடைய ஹதீஸை மர்ஃபூவாக (நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக) அறிவிப்பதை மறுத்துக் க்ரைக்கின்றார். மேலும் இந்த ஹதீஸை அஸ்பாத் என்பார் அஃமஷிடம் இருந்து அறிவிக்கும் போது ஆயிஷா (ரலி) யுடன் நிறுத்தப்பட்டது (மவ்கூப்) என்றே அறிவிக்கின்றார்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார் :

இந்த ஹதீஸின் (ஒவ்வொரு தொழுகைக்கும் உலூச் செய்ய வேண்டும் என்று இடம் பெறாத) முந்தைய பகுதியை இப்னு தாவூத் என்பார் அஃமஷிடம் இருந்து மர்ஃபூவானதாக அறிவிக்கின்றார். மேலும் அதில் ஒவ்வொரு தொழுகைக்கும் உலூச் செய்ய வேண்டும் என்று இடம் பெற்றிருப்பதை அவர் மறுத்துரைக்கின்றார். இந்த ஹபீப் அறிவிக்கின்ற ஹதீஸ் பலவீனமானது என்பதை ஆயிஷா (ரலி)யிடம் இருந்து உர்வா வழியாக ஜுஹ்ரி அறிவிக்கும் ஹதீஸ் தெரிவிக்கின்றது. சூதகரத்தப் போக்குள்ளவர் தொடர்பாக அன்னையாரின் அந்த ஹதீஸில், அவர் ஒவ்வொரு தொழுகைக்கம் குளிப்பவராக இருந்தார்கள் என்று அறிவிக்கின்றார்.

அலீ (ரலி) யிடமிருந்து தன் தந்தையார் வழியாக அறிவிக்கும் அதீ பின் ஸாபித்திடமிருந்து அபுல் யக்லான் என்பாரும் இப்னு அப்பாஸ் (ரலி) யிடம் இருந்து பனூ ஹாஷிம் கிளையாரின் அடிமை அம்மாரும், ஆயிஷா (ரலி) யிடமிருந்து கபீர் என்பாருடைய ஹதீஸ் மூலம் ஷுஃபி வழியாக அப்துல் மாலிக் பின் மைஸ்ரா, பயான், முகீரா, பிராஸ், முஜாலித் ஆகிய அனைவரும் (சூதகரத்தப்போக்குள்ள அப்பெண்மணியை நோக்கி) நீ ஒவ்வொரு தொழுகைக்கும் உலூச் செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றனர். 

ஒவ்வொரு நாளும் அவள் ஒரு தடவை குளிக்க வேண்டும் என்று ஆயிஷா (ரலி) யிடமிருந்த கமீர் மூலம் ஷுஃபீ வழியாக தாவூத், ஆஸிம் ஆகியோரின் அறிவிப்பு தெரிவிக்கின்றது.

ஹிஷாம் பின் உர்வா தன் தந்தை வழியாக சூதகரத்தப்போக்குள்ளவர் ஒவ்வொரு தொழுகைக்கும் குளிப்பாராக என்று அறிவிக்கின்றார். இந்த ஹதீஸ்கள் அனைமே பலவீனமானவை. ஆனால், கமீர், பனூ ஹாஷிம் கிளையாரின் அடிமை அம்மார், தன் தந்தை வழியாக அறிவிக்கும் ஹிஷாம் பின் உர்வா ஆகியவர்களின் ஹதீஸ்களை தவிர! ஆனால் இப்னு அப்பாஸ் (ரலி)யிடம் இருந்து அறிவிக்கப்படுகின்ற தெளிவான கருத்து (ஒவ்வொரு தொழுகைக்கும்) குளிக்க வேண்டும் என்பது தான். 

(குறிப்பு: இமாம் அபூதாவூத் இப்பாடத்தில் 9 அறிவிப்புகளை தெரிவிக்கின்றார்கள். இவற்றில் 297, 298, 300 ஆகிய ஹதீஸ்கள் மர்ஃபூவானவை. 299வது ஹதீஸ் துணை எண் குறிக்கப்பட்ட ஒன்றிலிருந்து ஐந்து வரை உள்ள ஹதீஸ்கள் ஆகிய இந்த ஆறு ஹதீஸ்களும் மவ்கூபானவையாகும். இமாம் அபூதாவூத் அவர்கள், இவை அனைத்துமே பலவீனமானவையே. ஆனால் மேற்குறிப்பிட்ட அம்மூவர் அறிவிக்கின்ற ஹதீஸ்களைத் தவிர என்று தெரிந்து இம்மூன்றில் இப்னு அப்பாஸ் (ரலி) யிடம் இருந்து பனூ ஹாஷிம் கிளையாரின் அடிமை அம்மார் அறிவிக்கின்ற ஒவ்வொரு தொழுகைக்கும் நீ உலூச் செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்கர்- வெறுக்கப்படுபவை என்ற வகையில் சேர்க்கின்றார்கள். காரணம் இப்னு அப்பாஸ் (ரலி)யிடம் இருந்து அறிவிக்கப்படுகின்ற தெளிவான கருத்து குளிக்க வேண்டும் என்று கூறியதனால் அதற்கு எதிராக அமையக் கூடிய கருத்து முன்கரேஆகும். முன்கரும் பலவீனம் என்ற வகையை சேர்ந்ததனால், பலவீனத்தை விட்டும் நீக்கிய கருத்துக்கள் இங்கு இரண்டுதான். ஒன்று கமீர் அறிவிக்கும் கருத்து, இன்னொன்று தன்தந்தை வழியாக அறிவிக்கும் ஷாம் பின் உர்வாவின் கருத்து ஆகும்.