«كَانَتْ أُمُّ حَبِيبَةَ تُسْتَحَاضُ فَكَانَ زَوْجُهَا يَغْشَاهَا»
பாடம் : 120
சூதக ரத்தப் போக்குள்ளவரை கட்டி உடலுறவு கொள்ளுதல்.
309. உம்மு ஹபீபா (ரலி) சூதக ரத்தப்போக்கு உள்ளவராக இருக்கும் போது அவரிடம் அவரது கணவர் உடலுறவு கொள்வார்.
அறிவிப்பவர் : உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி)
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்:
முஅல்லா பின் மன்சூர் நம்பிக்கை யாளர் என்று யஹ்யா பின் முஈன் தெரிவிக் கின்றார். இவர் எதையும் சொந்த அபிப் பிராய கண்ணோட்டத்துடன் அனுகுபவர் என்பதால் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் இவரிடமிருந்து எதையும் அறிவிக்க மாட்டார்கள்.