دَخَلَتْ عَلَى عَائِشَةَ، فَقُلْتُ: يَا أُمَّهِ اكْشِفِي لِي عَنْ قَبْرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصَاحِبَيْهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، «فَكَشَفَتْ لِي عَنْ ثَلَاثَةِ قُبُورٍ لَا مُشْرِفَةٍ، وَلَا لَاطِئَةٍ مَبْطُوحَةٍ بِبَطْحَاءِ الْعَرْصَةِ الْحَمْرَاءِ»
قَالَ أَبُو عَلِيٍّ: يُقَالُ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُقَدَّمٌ وَأَبُو بَكْرٍ عِنْدَ رَأْسِهِ، وَعُمَرُ عِنْدَ رِجْلَيْهِ، رَأْسُهُ عِنْدَ رِجْلَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
3220. காஸிம் பின் முஹம்மத் பின் அபூபக்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு தடவை) நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். பின்பு அன்னையே! எனக்கு நபி (ஸல்) அவர்கள் மற்றும் அவர்களின் இரு தோழர்களான அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரின் மண்ணறைகளைத் திறந்து காட்டுங்கள் என்றேன். எனவே, எனக்கு அவர்கள் மூன்று மண்ணறைகளையும் திறந்துகாட்டினார்கள். அவைகள் மிகவும் உயரமில்லாமலும், தரை மட்டமாக இல்லாமலும், அதன் மீது அர்ஸா எனும் இடத்திலிருக்கும் சிகப்பு நிற கூலாங்கற்களும் போடப்பட்டு இருந்தன.
(அபூதாவூத் இமாம் அவர்களின் மாணவர்களில் ஒருவரான) அபூஅலீ-முஹம்மத் பின் அஹ்மத் பின் அம்ர் அல்லுஃலுஈ கூறுகிறார்:
நபி (ஸல்) அவர்களின் மண்ணறை முதலாவதாகவும், அவர்களின் தலைக்கு அருகில் (இடதுபக்கமாக) அபூபக்ர் (ரலி) அவர்களின் மண்ணறையும், இவர்களுக்கு அடுத்ததாக (இடதுபக்கமாக) உமர் (ரலி) அவர்களின் மண்ணறையும் (நபி ஸல் அவர்களின் கால்பகுதிக்கு நேராக) ஆரம்பமாகிறது என்று கூறப்படுகிறது.