3226. ஹதீஸ் எண்-3225 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
ஹஃப்ஸ் பின் ஃகியாஸ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் உஸ்மான் பின் அபூஷைபா அவர்கள், (கப்ர் குழி வெட்டுவதற்காக தோண்டப்பட்ட மண்ணை விட) கூடுதலாக அதில் சேர்ப்பதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்று அறிவித்துள்ளார்.
ஸுலைமான் பின் மூஸாவின் அறிவிப்பில் (கப்ரின் மீது கட்டடம் எழுப்புவதையும்), அதன் மீது எழுதுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்று வந்துள்ளது.
ஹஃப்ஸ் பின் ஃகியாஸ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஸத்தத் அவர்கள், “கூடுதலாக அதில் சேர்ப்பதையும்” என்ற வாசகத்தைக் கூறவில்லை.
(மேலும்) அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
முஸத்தத் அவர்களின் அறிவிப்பில் “வ யுப்னா அலைஹி” என்ற வாசகத்தின் ஆரம்பத்தில் “வாவ்” என்ற எழுத்து வருமா அல்லது “வ அன்(ய்)” என்ற எழுத்து வருமா என்று எனக்குத் தெரியவில்லை.