«مَنِ اكْتَحَلَ فَلْيُوتِرْ، مَنْ فَعَلَ فَقْدَ أَحْسَنَ، وَمَنْ لَا فَلَا حَرَجَ، وَمَنْ اسْتَجْمَرَ فَلْيُوتِرْ، مَنْ فَعَلَ فَقَدْ أَحْسَنَ، وَمَنْ لَا فَلَا حَرَجَ، وَمَنْ أَكَلَ فَمَا تَخَلَّلَ فَلْيَلْفِظْ، وَمَا لَاكَ بِلِسَانِهِ فَلْيَبْتَلِعْ، مَنْ فَعَلَ فَقَدْ أَحْسَنَ وَمَنْ لَا فَلَا حَرَجَ، وَمَنْ أَتَى الْغَائِطَ فَلْيَسْتَتِرْ، فَإِنْ لَمْ يَجِدْ إِلَّا أَنْ يَجْمَعَ كَثِيبًا مِنْ رَمْلٍ فَلْيَسْتَدْبِرْهُ، فَإِنَّ الشَّيْطَانَ يَلْعَبُ بِمَقَاعِدِ بَنِي آدَمَ، مَنْ فَعَلَ فَقَدْ أَحْسَنَ وَمَنْ لَا فَلَا حَرَجَ»
பாடம் : 19
மலம், ஜலம் கழிக்கும் போது மறைத்துக் கொள்ளல்.
35. நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : எவர் சுருமா தீட்டுகிறாரோ அவர் ஒற்றைப் படையாக தீட்டுவாராக! எவர் (அவ்வாறு) செய்தாரோ அவர் நல்லதை செய்தவராவர். எவர் (அவ்வாறு) செய்யவில்லையோ அதனால் தவறில்லை. எவர் கற்களை வைத்து சுத்தம் செய்கின்றாரோ அவர் (அக்கற்களை) ஒற்றைப் படையாக்குவாராக! எவர் (அவ்வாறு) செய்தாரோ அவர் நல்லதை செய்தவராவர். எவர் அவ்வாறு செய்யவில்லையோ அதனால் தவறில்லை. எவரேனும் சாப்பிட்டதும் பற்குத்தினால் (அதை துப்பி விடுவாராக) அவர்களது நாவால் துளாவியதை விழுங்கி விடுவாராக! எவர் (அவ்வாறு) செய்தாரோ அவர் நல்லதை செய்தவராவர். எவர் (அவ்வாறு) செய்யவில்லையோ அதனால் தவறில்லை. எவர் மலம் கழிக்கச் செல்கிறாரோ அவர் மறைப்பை தேடிக் கொள்வாராக! திறந்த வெளியில் மணல் மேட்டை குவித்து அதில் மறைந்திருப்பதை தவிர அவர் வேறு வசதியை வெறவில்லையெனில் அதை பின்னோக்கி கொள்வாராக! ஏனெனில் சைத்தான் ஆதமுடைய மக்களின் பிட்டத்தில் விளையாடுகின்றான். எவர் (அவ்வாறு) செய்தாரோ அவர் நல்லதை செய்தார். எவர் (அவ்வாறு) செய்யவில் லையோ அதனால் தவறில்லை. இதை அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(குறிப்பு: இதன் மூன்றாவது அறிவிப்பாளராக இடம் பெறும் ஹுஸைன் அல்ஹிம்யரி என்பவர் யாரெனத் தெரியாதவர். இந்த ஹதீஸ் அஹ்மத், இப்னு ஹிப்பான், ஹாகிம், பைஹகீ ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.) ஆகவே இது நிராகரிக்கப்பட வேண்டியது.