الْقُضَاةُ ثَلَاثَةٌ: وَاحِدٌ فِي الْجَنَّةِ، وَاثْنَانِ فِي النَّارِ، فَأَمَّا الَّذِي فِي الْجَنَّةِ فَرَجُلٌ عَرَفَ الْحَقَّ فَقَضَى بِهِ، وَرَجُلٌ عَرَفَ الْحَقَّ فَجَارَ فِي الْحُكْمِ، فَهُوَ فِي النَّارِ، وَرَجُلٌ قَضَى لِلنَّاسِ عَلَى جَهْلٍ فَهُوَ فِي النَّارِ
3573. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் புகுவர்.
1 . நீதியை அறிந்து அதன்படி தீர்ப்பளிப்பவர். இவர் சொர்க்கத்தில் நுழைவார்.
2 . நீதியை அறிந்தும் அதன்படி தீர்ப்பளிக்காமல், தீர்ப்பில் அநீதி செய்பவர். இவர் நரகத்தில் நுழைவார்.
3 . உண்மையை அறியாமல் தன்னுடைய அறியாமையுடனேயே மக்களுக்குத் தீர்ப்பு வழங்கியவர். இவர் நரகத்தில் நுழைவார்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் இப்னு புரைதா அவர்கள், (தனது தந்தையிடமிருந்து) அறிவிக்கும் செய்தி மிகச் சரியானதாகும்.