🔗

அபூதாவூத்: 4

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْخَلَاءَ قَالَ: عَنْ حَمَّادٍ قَالَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ» وَقَالَ: عَنْ عَبْدِ الْوَارِثِ قَالَ: «أَعُوذُ بِاللَّهِ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ»


பாடம்: 3

ஒருவர் கழிப்பிடத்தில் நுழையும்போது என்ன சொல்ல வேண்டும்?

4. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கழிவறையில் நுழையும்போது, “அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மினல் ஃகுபுஸி வல்ஃகபாயிஸி.

(பொருள்: இறைவா! அருவருக்கத்தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியவற்றைத் தூண்டும் ஆண், பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்)” என்று கூறுவார்கள்.


அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

முஸத்தத் அவர்கள், ஹம்மாத் பின் ஸைத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பில், “அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல்குபுஸி வல்கபாயிஸி”என்றும்;

முஸத்தத் அவர்கள், அப்துல்வாரிஸ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பில், “அஊது பில்லாஹி மினல்குபுஸி வல்கபாயிஸி” என்றும் இடம் பெற்றுள்ளது.


(மேலும் அபூதாவூத் இமாம் கூறுகிறார்)

ஷுஅபா அவர்கள், அப்துல்அஸீஸ் பின் ஸுஹைப் அவர்களிடமிருந்து அறிவிக்கும் போது ஒரு தடவை “அல்லாஹும்ம இன்னீ அஊது பிக…”என்றும்; மற்றொரு தடவை “அஊதுபில்லாஹி…” என்றும் அறிவித்துள்ளார். (இதன் பொருளில் மாற்றமில்லை.)

அப்துல்அஸீஸ் பின் ஸுஹைப் அவர்களிடமிருந்து அறிவிக்கும் உஹைப் அவர்கள், (உங்களில் ஒருவர் கழிவறையும் நுழையும் போது) “அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடிக்கொள்ளட்டும்” என்று அறிவித்துள்ளார்.

இந்த நபிமொழி மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.