كُنْتُ رَدِيفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى حِمَارٍ، وَالشَّمْسُ عِنْدَ غُرُوبِهَا فَقَالَ: «هَلْ تَدْرِي أَيْنَ تَغْرُبُ هَذِهِ؟» قُلْتُ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ «فَإِنَّهَا تَغْرُبُ فِي عَيْنٍ حَامِيَةٍ»
4002. அபூதர் (ரலி) அறிவித்தார்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பின்னால் அமர்ந்து ஒரு கழுதையில் சவாரி செய்த போது சூரியன் அஸ்தமித்தது. அப்போது இது எங்கே அஸ்தமிக்கிறது தெரியுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான் அல்லாஹ்வும், அவனின் தூதருமே நன்கறிந்தவர்கள் என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அது சூடான நீரில் மறைகிறது என்று கூறினார்கள்.