ثَلَاثَةٌ لَا تَقْرَبُهُمُ الْمَلَائِكَةُ: جِيفَةُ الْكَافِرِ، وَالْمُتَضَمِّخُ بِالْخَلُوقِ، وَالْجُنُبُ، إِلَّا أَنْ يَتَوَضَّأَ
4180. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று நபர்களை (அல்லாஹ்வின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நெருங்கமாட்டார்கள்.
1 . இறைமறுப்பாளரின் உடல்.
2 . (பெண்கள் பயன்படுத்தும்) குங்குமப்பூ (போன்றவை கலந்த) வாசனைகளை பூசிக்கொள்பவர்.
3 . பெருந்துடக்கு உடையவர். (உளூ செய்தாலே தவிர)
அறிவிப்பவர்: அம்மார் பின் யாஸிர் (ரலி)