🔗

அபூதாவூத்: 4206

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

انْطَلَقْتُ مَعَ أَبِي نَحْوَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَإِذَا هُوَ «ذُو وَفْرَةٍ بِهَا رَدْعُ حِنَّاءٍ، وَعَلَيْهِ بُرْدَانِ أَخْضَرَانِ


4206. ரிஃபாஆ பின் யஸ்ரிபீ-அபூரிம்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் என் தந்தையுடன் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்களுக்கு மருதாணியால் சாயமிடப்பட்ட, காது மடல்கள் வரை தொங்கும் தலைமுடி இருந்தது. மேலும் அவர்கள் இரண்டு பச்சை நிற ஆடைகளை அணிந்திருந்தார்கள்.