«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ حَائِطًا، وَمَعَهُ غُلَامٌ مَعَهُ مِيضَأَةٌ، وَهُوَ أَصْغَرُنَا فَوَضَعَهَا عِنْدَ السِّدْرَةِ، فَقَضَى حَاجَتَهُ، فَخَرَجَ عَلَيْنَا وَقَدْ اسْتَنْجَى بِالْمَاءِ»
பாடம் : 23
தண்ணீரால் சுத்தம் செய்தல்.
43. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்திற்கு சென்றார்கள். அப்போது அவர்களுடன் ஒரு சிறுவர் தண்ணீர் பாத்திரத்துடன் சென்றார். அவர் எங்களில் மிகவும் சிறியவர். அதை அவர் இலந்த மரத்தடியில் வைத்தார். நபி (ஸல்) அவர்கள் தங்கள் இயற்கை தேவையை நிறைவேற்றி தண்ணீர் கொண்டு சுத்தம் செய்துவிட்டு எங்களிடம் வந்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)