«إِنِّي فَرَضْتُ عَلَى أُمَّتِكَ خَمْسَ صَلَوَاتٍ وَعَهِدْتُ عِنْدِي عَهْدًا أَنَّهُ مَنْ جَاءَ يُحَافِظُ عَلَيْهِنَّ لِوَقْتِهِنَّ أَدْخَلْتُهُ الْجَنَّةَ وَمَنْ لَمْ يُحَافِظْ عَلَيْهِنَّ فَلَا عَهْدَ لَهُ عِنْدِي»
430. “உனது சமுதாயத்தின் மீது ஐந்து நேர தொழுகைகளை நான் விதியாக்கியிருக்கின்றேன். யார் ஐந்து நேர தொழுகைகளை அவற்றிற்குரிய நேரங்களில் பேணி தொழுது வருகின்றாரோ அவரை நான் சுவனத்தில் நுழைப்பேன் என்று என்னிடத்தில் ஒரு வாக்குறுதி உண்டு.
யார் அந்த தொழுகைகளை பேணவில்லையோ அவருக்கு என்னிடத்தில் எந்த வாக்குறுதியும் கிடையாது” என்று அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூகதாதா பின் ரிப்யீ (ரலி)