🔗

அபூதாவூத்: 436

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«تَحَوَّلُوا عَنْ مَكَانِكُمُ الَّذِي أَصَابَتْكُمْ فِيهِ الْغَفْلَةُ»، قَالَ فَأَمَرَ بِلَالًا فَأَذَّنَ وَأَقَامَ وَصَلَّى،


436. உங்களுக்கு அசட்டைத் தன்மை ஏற்பட்டு விட்ட இந்த இடத்திலிருந்து மாறி விடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி பிலாலுக்கு உத்தரவிட்டனர். அவர் பாங்கு, இகாமத் சொன்னார். நபி (ஸல்) அவர்கள் தொழுதார்கள் என்று அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் மேலுள்ள ஹதீஸ் இங்கு இடம் பெறுகின்றது.

அபூஹுரைரா, சயீத் பின் அல் முஸ்ஸய்யப், மஃமர், அபான், மூஸா பின் இஸ்மாயில் ஆகியோர் இந்த ஹதீஸின் தொடரில் இடம் பெற்றுள்ளனர்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார் :

ஜுஹ்ரியுடைய இந்த ஹதீஸை மஃமர், இப்னு இஸ்ஹாக் வழியாக மாலிக், சுப்யான் பின் உஐனா, அவ்ஸாயீ, அப்துர் ரச்சாக் ஆகியோர் அறிவிக்கின்றார்கள். அவர்கள் யாருமே பாங்கை குறிப்பிடவில்லை. மஃமரிடமிருந்து அறிவிக்கும் இந்த ஹதீஸில் அவ்ஸாயீ, அபான் ஆகியோரைத் தவிர வேறு யாரும் பாங்கை சேர்த்து அறிவிக்கவில்லை.