🔗

அபூதாவூத்: 4513

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَنَّ أُمَّ مُبَشِّرٍ، قَالَتْ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ: مَا يُتَّهَمُ بِكَ يَا رَسُولَ اللَّهِ؟ فَإِنِّي لَا أَتَّهِمُ بِابْنِي شَيْئًا إِلَّا الشَّاةَ الْمَسْمُومَةَ الَّتِي أَكَلَ مَعَكَ بِخَيْبَرَ، وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «وَأَنَا لَا أَتَّهِمُ بِنَفْسِي إِلَّا ذَلِكَ، فَهَذَا أَوَانُ قَطَعَتْ أَبْهَرِي»


4513. கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உம்மு முபஷ்ஷிர் (ரலி), நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்த நோயின் போது, “அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு ஏற்பட்ட இந்த நோய்க்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? என் மகன்-பிஷ்ர் பின் பராஉக்கு வேறு எதாலும் வந்தது என்று நான் நினைக்கவில்லை; நீங்கள் கைபரில் அவருடன் உண்ட அந்த விஷம் கலந்த ஆட்டினால் தான் வந்தது என்று எண்ணுகிறேன்” என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நானும் என் நிலைக்கு அதையே தவிர வேறு எதையும் காரணமாக எண்ணவில்லை. இப்போதுதான் அது என் பெருநாளத்தை (முதுகுத் தண்டுக்கு அருகில் உள்ள நரம்பை) துண்டித்துவிட்டது” என்று கூறினார்கள்.


அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்கள், சில சமயங்களில் மஃமர் —> ஸுஹ்ரீ —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர் தொடரில் (முர்ஸலாக) அறிவித்தார். மேலும், சில சமயங்களில் மஃமர் —> ஸுஹ்ரீ —> அப்துர்ரஹ்மான் பின் கஅப் பின் மாலிக் —> (நபி-ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்தார்.

இது பற்றி அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்கள் கூறுகையில், மஃமர் (ரஹ்) அவர்கள் சில சமயங்களில் இந்த ஹதீஸை முர்ஸலாக அறிவித்தார்; அதை நாங்கள் எழுதிக்கொண்டோம். சில சமயங்களில் அதை முழு அறிவிப்பாளர்தொடருடன் (முஸ்னதாக) அறிவித்தார்; அதையும் நாங்கள் எழுதிக்கொண்டோம். எனவே இவை அனைத்தும் எங்கள் பார்வையில் சரியானவையே ஆகும்.

அப்துர்ரஸ்ஸாக் (ரஹ்) அவர்கள் மேலும் கூறினார்கள்:

இப்னுல் முபாரக் (ரஹ்) அவர்கள், மஃமர் (ரஹ்) அவர்களிடம் ஹதீஸை கேட்க வந்தபோது, மஃமர் (ரஹ்) அவர்கள் இதற்கு முன் முழுமையாக கூறாத (மவ்கூஃப்) செய்திகளை முஸ்னதாக-முழு அறிவிப்பாளர்தொடரில் அறிவித்தார்.