🔗

அபூதாவூத்: 4597

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّهُ قَامَ فِينَا فَقَالَ: أَلَا إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ فِينَا فَقَالَ: ” أَلَا إِنَّ مَنْ قَبْلَكُمْ مِنْ أَهْلِ الْكِتَابِ افْتَرَقُوا عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ مِلَّةً، وَإِنَّ هَذِهِ الْمِلَّةَ سَتَفْتَرِقُ عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ: ثِنْتَانِ وَسَبْعُونَ فِي النَّارِ، وَوَاحِدَةٌ فِي الْجَنَّةِ، وَهِيَ الْجَمَاعَةُ

«زَادَ ابْنُ يَحْيَى، وَعَمْرٌو فِي حَدِيثَيْهِمَا» وَإِنَّهُ سَيَخْرُجُ مِنْ أُمَّتِي أَقْوَامٌ تَجَارَى بِهِمْ تِلْكَ الْأَهْوَاءُ، كَمَا يَتَجَارَى الْكَلْبُ لِصَاحِبِهِ ” وَقَالَ عَمْرٌو: «الْكَلْبُ بِصَاحِبِهِ لَا يَبْقَى مِنْهُ عِرْقٌ وَلَا مَفْصِلٌ إِلَّا دَخَلَهُ»


4597.  (ஒரு தடவை) முஆவியா பின் ஸுஃப்யான் (ரலி) அவர்கள் உரை நிகழ்த்தும் போது கூறினார்கள்:

அறிந்துக்கொள்ளுங்கள்! (ஒரு தடவை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எங்களுக்கு உரை நிகழ்த்தும் போது, “அறிந்துக்கொள்ளுங்கள்! உங்களுக்கு முன் வேதம்கொடுக்கப்பட்டோர் எழுபத்திரண்டு மார்க்கமுடையவர்களாக பிரிந்துவிட்டனர். இந்த மார்க்கமுடையோர் எழுபத்தி மூன்று கூட்டமாக பிரிவர். எழுபத்திரண்டு கூட்டத்தினர் நரகம் செல்வர். ஒரு கூட்டத்தினர் சொர்க்கம் செல்வர். அவர்கள் தான் ஜமாஅத் ஆவர்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஆமிர் (ரஹ்)

முஹம்மது பின் யஹ்யா, அம்ர் பின் உஸ்மான் இவ்விருவரின் அறிவிப்பில், “எனது சமுதாயத்தில் சில கூட்டத்தினர் தோன்றுவார்கள். நாய் கடித்தவனுக்கு நோய் ஏற்படுவதைப் போன்று அவர்களுக்கு யூத,கிருத்துவர்களின் கொள்கை நோய் ஏற்படும்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

நாயால் கடிபட்டவனுக்கு நோயின் தாக்கம் அவனின் மூட்டுகளிலும், நரம்புகளிலும் பரவிவிடும். (அதுபோன்று யூத,கிருத்துவர்களின் கொள்கை அவர்களின் நாடி நரம்புகளில் ஊடுருவி விடும் என்று) அம்ர் பின் உஸ்மான் விளக்கம் கூறுகிறார்.