🔗

அபூதாவூத்: 4777

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

«مَنْ كَظَمَ غَيْظًا وَهُوَ قَادِرٌ عَلَى أَنْ يُنْفِذَهُ، دَعَاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى رُءُوسِ الْخَلَائِقِ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُخَيِّرَهُ اللَّهُ مِنَ الْحُورِ الْعِينِ مَا شَاءَ»


பாடம்:

கோபத்தை (மென்று விழுங்கி) கட்டுப்படுத்துபவர் (பெறும் கூலி).

4777. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தமது கோபத்தைச் செயல்படுத்த சக்தி பெற்றிருந்தும் அதை மென்று விழுங்கிவிடுகிறாரோ அவரை, அல்லாஹ் மறுமைநாளில் படைப்பினங்களுக்கு முன்னால் அழைப்பான்; (ஹூருல் ஈன் எனும்) சொர்க்கக் கன்னிகளில் அவர் விரும்பும் யாரையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள அவருக்கு உரிமை அளிப்பான்.

அறிவிப்பவர்: முஆத் பின் அனஸ் அல்ஜுஹனீ (ரலி)

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

(இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அறிவிப்பாளர்) அபூமர்ஹூம் என்பவரின் இயற்பெயர் அப்துர்ரஹ்மான் பின் மைமூன் என்பதாகும்.