🔗

அபூதாவூத்: 506

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَقَدْ أَعْجَبَنِي أَنْ تَكُونَ صَلَاةُ الْمُسْلِمِينَ – أَوْ قَالَ – الْمُؤْمِنِينَ، وَاحِدَةً، حَتَّى لَقَدْ هَمَمْتُ أَنْ أَبُثَّ رِجَالًا فِي الدُّورِ يُنَادُونَ النَّاسَ بِحِينِ الصَّلَاةِ، وَحَتَّى هَمَمْتُ أَنْ آمُرَ رِجَالًا يَقُومُونَ عَلَى الْآطَامِ يُنَادُونَ الْمُسْلِمِينَ بِحِينِ الصَّلَاةِ حَتَّى نَقَسُوا أَوْ كَادُوا أَنْ يَنْقُسُوا»، قَالَ: فَجَاءَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَمَّا رَجَعْتُ لِمَا رَأَيْتُ مِنَ اهْتِمَامِكَ رَأَيْتُ رَجُلًا كَأَنَّ عَلَيْهِ ثَوْبَيْنِ أَخْضَرَيْنِ، فَقَامَ عَلَى الْمَسْجِدِ فَأَذَّنَ، ثُمَّ قَعَدَ قَعْدَةً، ثُمَّ قَامَ فَقَالَ مِثْلَهَا، إِلَّا أَنَّهُ يَقُولُ: قَدْ قَامَتِ الصَّلَاةُ وَلَوْلَا أَنْ يَقُولَ النَّاسُ – قَالَ ابْنُ الْمُثَنَّى: أَنْ تَقُولُوا – لَقُلْتُ إِنِّي كُنْتُ يَقْظَانَ غَيْرَ نَائِمٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: – وَقَالَ ابْنُ الْمُثَنَّى – «لَقَدْ أَرَاكَ اللَّهُ عَزَّ وَجَلَّ خَيْرًا»، – وَلَمْ يَقُلْ عَمْرٌو: «لَقَدْ أَرَاكَ اللَّهُ خَيْرًا» – فَمُر بِلَالًا فَلْيُؤَذِّنْ، قَالَ: فَقَالَ عُمَرُ: أَمَا إِنِّي قَدْ رَأَيْتُ مِثْلَ الَّذِي رَأَى، وَلَكِنِّي لَمَّا سُبِقْتُ اسْتَحْيَيْتُ، قَالَ: وَحَدَّثَنَا أَصْحَابُنَا، قَالَ: وَكَانَ الرَّجُلُ إِذَا جَاءَ يَسْأَلُ فَيُخْبَرُ بِمَا سُبِقَ مِنْ صَلَاتِهِ وَإِنَّهُمْ قَامُوا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ بَيْنِ قَائِمٍ وَرَاكِعٍ وَقَاعِدٍ وَمُصَلٍّ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. قَالَ ابْنُ الْمُثَنَّى: قَالَ عَمْرٌو: وَحَدَّثَنِي بِهَا حُصَيْنٌ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى حَتَّى جَاءَ مُعَاذٌ، قَالَ شُعْبَةُ: وَقَدْ سَمِعْتُهَا مِنْ حُصَيْنٍ، فَقَالَ: لَا أَرَاهُ عَلَى حَالٍ إِلَى قَوْلِهِ كَذَلِكَ فَافْعَلُوا، قَالَ أَبُو دَاوُدَ: ” ثُمَّ رَجَعْتُ إِلَى حَدِيثِ عَمْرِو بْنِ مَرْزُوقٍ، قَالَ: فَجَاءَ مُعَاذٌ، فَأَشَارُوا إِلَيْهِ، قَالَ شُعْبَةُ: وَهَذِهِ سَمِعْتُهَا مِن حُصَيْنٍ، قَالَ: فَقَالَ مُعَاذٌ: لَا أَرَاهُ عَلَى حَالٍ إِلَّا كُنْتُ عَلَيْهَا، قَالَ: فَقَالَ: إِنَّ مُعَاذًا، قَدْ سَنَّ لَكُمْ سُنَّةً، كَذَلِكَ فَافْعَلُوا ” قَالَ: وَحَدَّثَنَا أَصْحَابُنَا، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا قَدِمَ الْمَدِينَةَ ” أَمَرَهُمْ بِصِيَامِ ثَلَاثَةِ أَيَّامٍ، ثُمَّ أُنْزِلَ رَمَضَانُ، وَكَانُوا قَوْمًا لَمْ يَتَعَوَّدُوا الصِّيَامَ، وَكَانَ الصِّيَامُ عَلَيْهِمْ شَدِيدًا فَكَانَ مَنْ لَمْ يَصُمْ أَطْعَمَ مِسْكِينًا، فَنَزَلَتْ هَذِهِ الْآيَةُ: {فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ} [البقرة: 185] فَكَانَتِ الرُّخْصَةُ لِلْمَرِيضِ، وَالْمُسَافِرِ فَأُمِرُوا بِالصِّيَامِ ” قَالَ: وَحَدَّثَنَا أَصْحَابُنَا، قَالَ: وَكَانَ الرَّجُلُ إِذَا أَفْطَرَ فَنَامَ قَبْلَ أَنْ يَأْكُلَ لَمْ يَأْكُلْ حَتَّى يُصْبِحَ، قَالَ: ” فَجَاءَ عُمَرُ بْنُ الْخَطَّابِ، فَأَرَادَ امْرَأَتَهُ، فَقَالَتْ: إِنِّي قَدْ نِمْتُ فَظَنَّ أَنَّهَا تَعْتَلُّ فَأَتَاهَا، فَجَاءَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ فَأَرَادَ الطَّعَامَ فَقَالُوا: حَتَّى نُسَخِّنَ لَكَ شَيْئًا، فَنَامَ ” فَلَمَّا أَصْبَحُوا أُنْزِلَتْ عَلَيْهِ هَذِهِ الْآيَةُ {أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَى نِسَائِكُمْ} [البقرة: 187]


506. தொழுகையில் மூன்று மாற்றங்கள் ஏற்பட்டன என்று சொல்லி நமக்கு நம்முடைய நபித் தோழர்கள் அறிவித்தார்கள் என்று பின் வரும் ஹதீஸை இப்னு அபீலைலா அறிவிக்கலானார்.

முஸ்லிம்களின் தொழுகை ஒரே கட்டுக் கோப்பில் அமைய வேண்டும் என்று என் மனம் விரும்பியது. அதனால் தொழுகை நேரத்தை மக்களுக்கு அறிவிக்கும் ஆட்களை வீடுகளுக்கு அனுப்பலாம் என்று எண்ணியிருந்தேன். கோட்டைகள் மீது நின்று கொட்டடித்து தொழுகை நேரத்தை முஸ்லிம்களுக்கு அறிவிக்கும் ஆட்களை நியமிக்கலாம் என்றும் எண்ணியிருந்தேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! தொழுகையின் (அழைப்பைப் பற்றி) நீங்கள் கொண்டிருந்த கவலையை எண்ணிக் கொண்டே நான் (வீட்டிற்கு) திரும்பியதும் இரண்டு பச்சை ஆடைகள் அணிந்த தோற்றத்தில் ஒருவரைக் கண்டேன். அவர் பள்ளியில் நின்று கொண்டு அதான் சொன்னார். பிறகு கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டு, எழுந்து நின்று அதே போன்று சொன்னார். ஆனால் இதில் கத்காமத்திஸ் ஸலாத் என்று (கூடுதலாக) சொன்னார். மக்கள் குறை சொல்லமாட்டார்கள் என்றிருப்பின் நான் விழித்துக் கொண்டிருக்கும் போது தான் (கண்டேன்) தூங்கிக் கொண்டிருக்கும் போது அல்ல என்று நான் சொல்லியிருப்பேன் என்று (அன்சாரித் தோழர் குறிப்பிட்டார்) சொன்னதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ் உங்களுக்கு நன்மையைக் காட்டித் தந்து விட்டான். நீர் பிலாலை ஏவுங்கள். அவர் அதான் சொல்லட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். உடனே உமர் (ரலி) அவர் கண்ட மாதிரி நானும் கண்டேன். எனக்கு முந்தி இந்த செய்தி வந்து விட்டதால் (இதை சொல்ல) எனக்கு வெட்கமாகி விட்டது என்று சொன்னார். (எனவே இது தொழுகையில் ஏற்பட்ட முதல் மாற்றமாகும்.)

(இரண்டாவது மாற்றத்தை இப்னு அபீலைலா தெரிவிக்கும் போது) எங்களுடைய தோழர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள் என (பின்வரும் செய்தியை) அறிவிக்கலானார்.

(ஜமாஅத் தொழுகை நடந்து கொண்டிருக்கும் போது) ஒருவர் வந்து (அருகில் தொழுது கொண்டிருப்பவரிடம் எத்தனை ரக்அத்துக்கள் முடிந்திருக்கின்றன என்று சாடையாக) கேட்பார். அப்போது அவரது தொழுகையில் இத்தனை ரக்அத்துக்கள் அவர் வந்து சேருமுன் முடிந்து விட்டன என்று அவரிடம் தெரிவிக்கப்படும்! (வந்தவர் தான் ஜமாஅத்தில் சேருமுன்பு விடுபட்ட ரக்அத்துக்களை முதலில் தொழுவார்.

முஅத் (ரலி) (ஒரு தடவை ஜமாஅத்திற்கு பிந்தி) வரும் வரை நபித் தோழர்கள் (ஜமாஅத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (தொழுதாலும்) (சிலர்) ருகூஃவிலும் (சிலர்) இருப்பிலும் என்று பல்வேறு நிலைகளில் (விடுபட்டதை) தொழுது கொண்டும் (இன்னும் சிலர் ஆரம்பத்திலிருந்தே) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தனர்.

(இந்நிலையில்) முஆத் (ரலி) (தாமதமாக தொழ) வந்ததும் நபித் தோழர்கள் (இத்தனை ரக்அத்துக்கள் முடிந்து விட்டிருக்கின்றன என்று வழக்கமாக சமிக்ஞை செய்வது போல்) சமிக்ஞை செய்தனர். அப்போது முஆத் (ரலி) நபி (ஸல் அவர்களை (நிலை ருகூஃ, சுஜுது என்று) எந்த நிலையில் இருக்கும் போது அடைகின்றேனோ அதே நிலையில் தொடர்ந்து தொழுவதற்கு மாற்றமாக தொழுவதை நான் விரும்பவில்லை! விடுபட்டதை முதலில் தொழாமல் (பின்னால் எழுந்து தொழுது நிறை வேற்றினார்கள்) என்று சொன்னார்.

மேலும், நிச்சயமாக முஆத் (நல்ல) நடை முறையை ஏற்படுத்தி விட்டார். அவ்வாறே நீங்களும் செய்யுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவும் முஆத் (ரலி) அறிவித்தார்.

(இவ்வாறு தொழுகையில் ஏற்பட்ட மூன்று மாற்றங்களில் இரண்டு மாற்றங்களையே அறிவிப்பாளர் தெரிவித்து விட்டு நோன்பைப் பற்றி அறிவிக்கின்றார்.)

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்ததும் மக்களிடம் மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். பிறகு ரமலான் நோன்பு 2 : 184 தொடர்பான வசனம் இறங்கியது. அவர்கள் நோன்பு நோற்கும் பழக்கமில்லாத கூட்டமாக இருந்தனர்! அவர்களுக்கு நோன்பு மிக சிரமமானதாக இருந்தது. யார் நோன்பு நோற்கவில்லையோ அவர் ஓர் ஏழைக்கு உணவு வழங்கி விடுவார். அப்போது உங்களில் யார் அம்மாதத்தை அடைகின்றாரோ அவர் நோன்பு நோற்கவும் 2 : 185 என்ற வசனம் (ஏற்கனவே இருந்த சலுகையை ரத்து செய்து) இறங்கியது. ஆனால் நோயாளிக்கும் பயணிக்கும் சலுகை நீடித்தது. அதே வேளையில் நோயாளிகள், பயணிகள் (விடுபட்ட நோன்பை பின்னர் நோற்குமாறு) கட்டளையிடப் பட்டனர்.

ஒருவர் நோன்பு துறந்து சாப்பிடுவதற்கு முன்பு உறங்கி விட்டார். எனில், அவர் காலை வரை சாப்பிட முடியாது. (இப்படி ஒரு சட்டம் அமுலில் இருக்கும் போது) உமர் (ரலி) தன்னுடைய மனைவியை நாடி வந்த சமயத்தில் அவரது மனைவி நான் தூங்கிவிட்டேன். (தூங்கிய பிறகு சாப்பிடவோ, உடலுறவு கொள்ளக் கூடாது என்பதால்) என்று சொன்னார். உமர் (ரலி) தனது மனைவி சாக்கு போக்கு சொல்லி சமாளிக்கின்றார் என்று எண்ணி அவரிடத்தில் உறவு கொண்டார்.

அன்சாரிகளில் ஒருவர் வந்து சாப்பிட விரும்பினார். உணவை சூடு பண்ணி தருகின்றோம் என்று அவருடைய குடும்பத்தார் சொன்னார்கள். ஆனால், (அதற்குள்ளாக) அவர் உறங்கிவிட்டார். (இதனால் சாப்பிட முடியாமல் ஆனது) அவர்கள் காலையில் எழுந்ததும், நோன்பு கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது 2 : 187 என்ற வசனம் இறங்கியது.

அறிவிப்பாளர் வரிசை : 

1) இப்னு அபீலைலா ——–> அம்ர் பின் முர்ரா ——–> ஷு ஃபா ——–> முஹம்மது பின் ஜஃபர் ——–> இப்னுல் முஸன்னா

மக்கள் குறை சொல்ல மாட்டார்கள் என்றிருப்பின் என்பதற்கு பதில் இப்னுல் முஸன்னா தனது அறிவிப்பில் நீங்கள் குறை சொல்ல மாட்டீர்கள் என்றிருப்பின் என்று இடம் பெறுகின்றது. 

மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ் உங்களுக்கு நன்மையை காட்டி விட்டான் என்று அம்ர் பின் மர்சூக் தனது அறிவிப்பில் தெரிவிக்கவில்லை. 

முஆத் (ரலி) (தாமதமாக தொழ) வந்ததும் நபித் தோழர்கள் (இத்தனை ரக்அத்துக்கள் முடிந்து விட்டிருக்கின்றன என்று வழக்கமாக சமிக்ஞை செய்வது போல்) சமிக்ஞை செய்தனர். அப்போது முஆத் (ரலி) நபி (ஸல்) அவர்களை (நிலை ருகூஃ, சுஜுது என்று) எந்த நிலையில் இருக்கும் போது அடைகின்றாரோ அதே நிலையிலேயே தொடர்ந்து தொழுவதற்கு மாற்றமாக நான் தொழ விரும்பவில்லை என்று (சொல்லி) பின்னால் எழுந்து (விடுபட்டதை) தொழுது நிறைவேற்றினார்கள் என்று சொன்னார். மேலும் நிச்சயமாக முஆத் (ரலி) நல்ல முடைமுறையை ஏற்படுத்தி விட்டார். அவ்வாறே நீங்களும் செய்யுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவும் முஆத் (ரலி) அறிவித்தார்.

இவ்வாறு ஹுஸைன் கூற நான் செவியுற்றேன் என்று ஷுஃபா தெரிவிக்கின்றார். (அம்ர் பின் முர்ரா என்பார் இப்னு அபீலைலா (ரலி) யிடமிருந்து நேரடியாக அறிவிக்கும் போது மேலுள்ள செய்தியை போன்றே அறிவிக்கின்றார்.)

இதே அம்ர் பின் முர்ரா தனக்கு இந்த ஹதீஸை ஹுசைன் அறிவித்தார் என்று அறிவிக்கும் போது முஆத் (ரலி) வ(ந்து நல்ல முறையை ஏற்படுத்தித் த)ரும் வரையில் என்பது வரை மட்டும் என்று இப்னு அபீலைலா அறிவித்ததாக கூறுகின்றார்.

இவ்வாறு இப்னுல் முஸன்னாவின் அறிவிப்பில் வருகின்றது.

(இப்போது) அம்ர் பின் மர்சூக் உடைய அறிவிப்புக்கு வருகின்றேன் என்று அம்ர் பின் மர்சூக் உடைய முஆத் (ரலி) தொடர்பான செய்தியை முழுமையாக அறிவிக்கின்றார்.