🔗

அபூதாவூத்: 5074

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَعُ هَؤُلَاءِ الدَّعَوَاتِ، حِينَ يُمْسِي، وَحِينَ يُصْبِحُ: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي، اللَّهُمَّ اسْتُرْ عَوْرَتِي»، وَقَالَ عُثْمَانُ: «عَوْرَاتِي وَآمِنْ رَوْعَاتِي، اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ، وَمِنْ خَلْفِي، وَعَنْ يَمِينِي، وَعَنْ شِمَالِي، وَمِنْ فَوْقِي، وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي»


5074. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலை, மாலை வேளைகளில் இந்த துஆக்களை ஓதுவதை விடுவதே இல்லை:

“அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகல் ஆஃபியத ஃபித்துன்யா வல்ஆகிரஹ். அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகல் அஃப்வ வல்ஆஃபியத ஃபீ தீனீ, வ துன்யாய, வ அஹ்லீ, வ மாலீ. அல்லாஹும்மஸ்துர் அவ்ராதீ, வ ஆமின் ரவ்ஆதீ, அல்லாஹும்மஹ்ஃபள்னீ மிம் பைனி யதைய்ய, வ மின் கல்ஃபீ, வ அன் யமீனீ, வ அன் ஷிமாலீ, வ மின் ஃபவ்கீ. வ அஊது பிஅளமதிக அன் உஃக்தால மின் தஹ்தீ.

(பொருள்: “அல்லாஹ்வே! இம்மையிலும் மறுமையிலும் உன்னிடம் நான் மன்னிப்பையும் நல்வாழ்வையும் கேட்கிறேன். அல்லாஹ்வே! எனது மார்க்கத்திலும், எனது உலக வாழ்விலும், எனது குடும்பத்திலும், எனது செல்வத்திலும் உன்னிடம் மன்னிப்பையும் நல்வாழ்வையும் கேட்கிறேன். அல்லாஹ்வே! எனது குறைகளை மறைப்பாயாக! எனது அச்சங்களைப் போக்கி எனக்கு அமைதி அளிப்பாயாக! அல்லாஹ்வே! எனக்கு முன்னாலிருந்தும், எனக்குப் பின்னாலிருந்தும், எனது வலப்புறத்திலிருந்தும், எனது இடப்புறத்திலிருந்தும், எனக்கு மேலிருந்தும் என்னை நீ பாதுகாப்பாயாக! நான் எனக்குக் கீழிருந்து வஞ்சிக்கப்படுவதை விட்டும் உனது மகத்துவத்தைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகிறேன்)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

உஸ்மான் பின் அபூஷைபா அவர்களின் அறிவிப்பில், “அல்லாஹும்மஸ்துர் அவ்ரதீ” என்று இடம்பெற்றுள்ளது.

இதன் (அறிவிப்பாளர்களில் ஒருவரான)  வகீஃ அவர்கள், “எனக்குக் கீழிருந்து வஞ்சிக்கப்படுவது” என்பதற்கு “நிலநடுக்கம்-அதாவது பூமி பிளந்து உள்வாங்குவதைக் குறிக்கும்” என்று விளக்கமளித்தார்.