أَنَّهُ أَسَرَّ إِلَيْهِ فَقَالَ: ” إِذَا انْصَرَفْتَ مِنْ صَلَاةِ الْمَغْرِبِ فَقُلْ: اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ سَبْعَ مَرَّاتٍ، فَإِنَّكَ إِذَا قُلْتَ ذَلِكَ ثُمَّ مِتَّ فِي لَيْلَتِكَ كُتِبَ لَكَ جِوَارٌ مِنْهَا، وَإِذَا صَلَّيْتَ الصُّبْحَ فَقُلْ كَذَلِكَ، فَإِنَّكَ إِنْ مِتَّ فِي يَوْمِكَ كُتِبَ لَكَ جِوَارٌ مِنْهَا
أَخْبَرَنِي أَبُو سَعِيدٍ، عَنِ الْحَارِثِ، أَنَّهُ قَالَ: «أَسَرَّهَا إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَنَحْنُ نَخُصُّ بِهَا إِخْوَانَنَا»
5079. முஸ்லிம் பின் அல்ஹாரிஸ் அத்தமீமீ அறிவிக்கின்றார்:
நீ சுப்ஹு தொழுதால் யாரோடும் பேசுவதற்கு முன்னர், ”அல்லாஹும்ம அஜிர்னீ மினன் நார்’ என்று ஏழு தடவைகள் கூறி, அதன் பகல் பொழுதில் நீ மரணித்தால், நரகை விட்டும் பாதுகாப்பு ஒன்றை அல்லாஹ் ஏற்படுத்துவான். மேலும் மக்ரிப் தொழுதுவிட்டு, யாரோடும் பேசுவதற்கு முன்னர் ”அல்லாஹும்ம அஜிர்னீ மினன் நார்’ என்று ஏழு தடவைகள் கூறி, அதன் இரவுப் பொழுதில் நீ மரணித்தால், நரகை விட்டும் பாதுகாப்பு ஒன்றை அல்லாஹ் ஏற்படுத்துவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ரகசியமாகக் கூறினார்கள்.
அபூஸஈத் அவர்கள் ஹாரிஸ் அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்:
இதனை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு இரகசியமாகக் கூறினார்கள்; எனவே நாங்கள் எங்கள் சகோதரர்களுக்கு இதனைச் பிரத்தியேகமாகக் கற்றுக் கொடுக்கிறோம்.