🔗

அபூதாவூத்: 5097

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«الرِّيحُ مِنْ رَوْحِ اللَّهِ» قَالَ سَلَمَةُ: «فَرَوْحُ اللَّهِ تَأْتِي بِالرَّحْمَةِ، وَتَأْتِي بِالْعَذَابِ، فَإِذَا رَأَيْتُمُوهَا فَلَا تَسُبُّوهَا، وَسَلُوا اللَّهَ خَيْرَهَا، وَاسْتَعِيذُوا بِاللَّهِ مِنْ شَرِّهَا»


5097. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதை நான் செவியுற்றேன்:

காற்று அல்லாஹ்வின் அருளிலிருந்து வருகிறது. அது (சில நேரம்) அருளையும், (சில நேரம்) தண்டனையையும் கொண்டுவருகிறது. ஆகவே நீங்கள் அதைக் காணும்போது, அதைத் திட்டாதீர்கள். மாறாக அதன் நன்மையை அல்லாஹ்விடம் கேளுங்கள். மேலும், அதன் தீங்கை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள்.


ஸலமா பின் ஷபீப் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் இதே கருத்து, “சிறிது வார்த்தை வித்தியாசத்துடன்” வந்துள்ளது.