🔗

அபூதாவூத்: 571

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لَوْ تَرَكْنَا هَذَا الْبَابَ لِلنِّسَاءِ»

قَالَ نَافِعٌ: فَلَمْ يَدْخُلْ مِنْهُ ابْنُ عُمَرَ حَتَّى مَاتَ،

قَالَ أَبُو دَاوُدَ: رَوَاهُ إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، قَالَ: قَالَ عُمَرُ: وَهَذَا أَصَحُّ


571. இந்த வாசலை பெண்களுக்காக ஒதுக்கிவிட்டால் (நல்லது தானே) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

அந்த வாசல் வழியாக மரணமாகும் வரை இப்னு உமர் (ரலி) பள்ளிக்குள் நுழையவே இல்லை என நாஃபிஉ (ரஹ்) கூறினார்.

அபூதாவூத் கூறுகிறார்:

அய்யூப் அவர்களிடமிருந்து அறிவிக்கும் இஸ்மாயீல் பின் இப்ராஹீம் அவர்களின் அறிவிப்பில் நாஃபிஉ அவர்கள், உமர் (ரலி) கூறியதாக அறிவித்ததாக வந்துள்ளது. இதுதான் மிகச் சரியானதாகும்.