«إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ فَلَا تَأْتُوهَا تَسْعَوْنَ، وَأْتُوهَا تَمْشُونَ، وَعَلَيْكُمُ السَّكِينَةُ فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا، وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا»
பாடம் : 198
தொழுகைக்கு விரைதல்.
572. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் அதற்காக வேகமாக ஓடிவர வேண்டாம்! தொழுகைக்கு அமைதியாக நிங்கள் நடந்தே வாருங்கள். நீங்கள் அடைந்து கொண்ட ரக்அத்துக்களை தொழுதுக் கொண்டு தவறிவிட்ட ரக்அத்துக்களை பூர்த்தி செய்துக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றிருக்கிறேன் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்
தவறிவிட்ட ரக்அத்துக்களை பூர்த்தி செய்யுங்கள் என்று தான் ஜுபைதி, இப்னு அபீதிஃப், இப்ராகீம் பின் சஃத், மஃமர், ஹுஐப் பின் அபீஹம்சா ஆகியோர் ஜுஹிரி வழியாக அறிவிக்கின்றார்.
பூர்த்தி செய்யுங்கள் என்று அபூஹுரைரா (ரலி) மூலம் ஜஃபர் பின் ரபீஆஅப அறிவிக்கின்றார். நபி (ஸல்) அவர்களிடமிருந்து பூர்த்தி செய்யுங்கள் என அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அபூகதாதா (ரலி), அனஸ் (ரலி) ஆகியோர் அனைவரும் அறிவிக்கின்றனர்.
ஜுஹ்ரியிடமிருந்து இப்னு உஐனா மட்:டும் திரும்ப நிறைவேற்றுங்கள் என்று அறிவிக்கின்றார்.