🔗

அபூதாவூத்: 577

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

جِئْتُ وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّلَاةِ فَجَلَسْتُ وَلَمْ أَدْخُلْ مَعَهُمْ فِي الصَّلَاةِ، قَالَ: فَانْصَرَفَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَى يَزِيدَ جَالِسًا، فَقَالَ: «أَلَمْ تُسْلِمْ يَا يَزِيدُ»، قَالَ: بَلَى يَا رَسُولَ اللَّهِ قَدْ أَسْلَمْتُ، قَالَ: «فَمَا مَنَعَكَ أَنْ تَدْخُلَ مَعَ النَّاسِ فِي صَلَاتِهِمْ؟»، قَالَ: إِنِّي [ص:158] كُنْتُ قَدْ صَلَّيْتُ فِي مَنْزِلِي وَأَنَا أَحْسَبُ أَنْ قَدْ صَلَّيْتُمْ، فَقَالَ: «إِذَا جِئْتَ إِلَى الصَّلَاةِ فَوَجَدْتَ النَّاسَ فَصَلِّ مَعَهُمْ وَإِنْ كُنْتَ قَدْ صَلَّيْتَ تَكُنْ لَكَ نَافِلَةً وَهَذِهِ مَكْتُوبَةٌ»


577. நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் இருக்கும் போது நான் வந்து மக்களுடன் (ஜமாஅத்) தொழுகையில் சேராமல் உட்கார்ந்து விட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்து விட்டு எங்களை நோக்கி திரும்பிய போது யசீதை பார்த்து யசீதே! நி இன்னும் முஸ்லிமாகவில்லையா? என்று கேட்டார்கள். அதற்கு யசீத், அல்லாஹ்வின் தூதரே! நான் முஸ்லிமாகிவிட்டேன் என்று பதிலளித்தார். மக்களுடன் சேர்ந்து அவர்களுடைய தொழுகையில் கலந்து கொள்ள எது தடையாக இருந்தது? என்று கேட்டார்கள். நீங்கள் தொழுது விட்டீர்கள் என்று எண்ணி நான் என்னுடைய வீட்டிலேயே தொழுதுவிட்டேன் என்று பதில் சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ தொழுகைக்கு வரும் வேளையில் மக்களை தொழக் கண்டால் அவர்களுடன் சேர்ந்து நீயும் தொழுதுகொள். நீ ஏற்கனவே தொழுதிருந்தால் அந்த தொழுகை (அல்லது இப்போது ஜமாஅத்துடன் சேர்ந்து தொழும் தொழுகை) உனக்கு உபரியான தொழுகையாகவும் இந்த தொழுகை கடமையானதாகவும் ஆகிவிடும் என்று சொன்னார்கள்.