🔗

அபூதாவூத்: 582

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«يَؤُمُّ الْقَوْمَ أَقْرَؤُهُمْ لِكِتَابِ اللَّهِ وَأَقْدَمُهُمْ قِرَاءَةً فَإِنْ كَانُوا فِي الْقِرَاءَةِ سَوَاءً فَلْيَؤُمَّهُمْ أَقْدَمُهُمْ هِجْرَةً فَإِنْ كَانُوا فِي الْهِجْرَةِ سَوَاءً، فَلْيَؤُمَّهُمْ أَكْبَرُهُمْ سِنًّا وَلَا يُؤَمُّ الرَّجُلُ فِي بَيْتِهِ وَلَا فِي سُلْطَانِهِ وَلَا يُجْلَسُ عَلَى تَكْرِمَتِهِ إِلَّا بِإِذْنِهِ»، قَالَ شُعْبَةُ: فَقُلْتُ لِإِسْمَاعِيلَ: مَا تَكْرِمَتُهُ؟ قَالَ: فِرَاشُهُ.


பாடம் : 204

இமாமாக பணியாற்ற தகுதியானவர்.

582. அல்லாஹ்வின் வேதத்தை நன்கு ஓதத் தெரிந்தவர் குர்ஆனை ஓதுவதில் முந்தியவர் மக்களுக்கு தொழுவிக்க வேண்டும். குர்ஆனை ஓதுவதில் அவர்கள் சமநிலையில் இருந்தால் ஹிஜ்ரத் செய்வதில் முந்தியவர் தொழுவிக்க வேண்டும். ஹிஜ்ரத் (நாடு துறந்து செல்வது) செய்வதில் அவர்கள் சமநிலையில் இருந்தால் வயதில் மூத்தவர் தொழுவிக்க வேண்டும். ஒருவர் (இன்னொருவரின்) வீட்டிலும் (இன்னொருவருடைய) அதிகாரத்திற்குரிய இடத்திலும் அவருடைய அனுமதியின்றி தொழுவிக்க கூடாது. அவருடைய அனுமதியில்லாமல் அவருடைய இருக்கையில் உட்காரக் கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூமல்ஆத் அல்பத்ரி (ரலி) அறிவிக்கின்றார் என அபூமஸ்வூத் அல்பத்ரி (ரலி) அறிவிக்கின்றார்.

இந்த ஹமதஸில் இருக்கைக்கு தக்ரிமா என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனக்கு முந்திய அறிவிப்பாளரான இஸ்மாயிலிடம் “தக்ரிமா’ என்றால் என்ன? என வினவினேன். அதற்கு அவர் “இருக்கை’ என்று விளக்கமளித்தார் என ஷுஃபா தெரிவிக்கின்றார். 

இந்த ஹதீஸில் முஸ்லிம், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களில் இடம் பெறுகின்றது.