«لَا يُصَلِّ الْإِمَامُ فِي الْمَوْضِعِ الَّذِي صَلَّى فِيهِ حَتَّى يَتَحَوَّلَ»
பாடம்:
கடமையான தொழுகையை தொழுத இடத்திலேயே நஃபிலான தொழுகையை இமாம் தொழுதல்.
616. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தான் (கடமையான தொழுகையை) தொழுத இடத்திலிருந்து வேறு இடம் மாறுகின்ற வரை ஓர் இமாம் தான் தொழுத இடத்திலேயே தொழ வேண்டாம்.
அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி)
இமாம் அபூதாவூத் கூறுகிறார்:
(முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும்) அதாஉ பின் அப்துல்லாஹ் அல்குராஸானீ என்பவர் முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்களை சந்திக்கவில்லை.