🔗

அபூதாவூத்: 694

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«لَا تُصَلُّوا خَلْفَ النَّائِمِ وَلَا الْمُتَحَدِّثِ»


பாடம்:

பேசிக்கொண்டோ தூங்கிக் கொண்டோ இருப்பவருக்கு பின்னால் (இருந்து) தொழுவது.

694. முஹம்மது பின் கஅப் அல்குரளீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை தூங்குபவனுக்குப் பின்னால் உமர் பின் அப்துல்அஸீஸ் (ரஹ்) அவர்கள் தொழுவதைப் பார்த்தேன்). உடனே நான் அவர்களிடம், “தூங்குபவனுக்குப் பின்னாலும், பேசிக்கொண்டிருப்பவனுக்குப் பின்னாலும் தொழ வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்த செய்தியை கூறினேன்.